உலகம்
பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்
பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்
பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது. இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேலின் கைகளில் இருக்க முடியாது என பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காசாவில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி குற்றம்சாட்டியுள்ளார்.