tamilni 284 scaled
உலகம்செய்திகள்

இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்

Share

இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

மட்டுமின்றி, இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 600 சிறார்கள் மாயமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கு அசைக்க முடியாத ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாலஸ்தீன மக்களின் அழுகுரலை உலக நாடுகள் புறக்கணிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்னர் ராஃபா எல்லை திறந்துவிடப்பட்டுள்ளது. அத்துடன் காஸா மக்களுக்கான 20 லொறி நிவாரணப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காஸா பகுதி மக்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், இந்த 20 லொறி நிவாரணம் என்பது கடலில் விழுந்த துளிக்கு சமம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒரு துளி, வரும் நாட்களில் பாயும் உதவி நதியாக மாறும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அக்டோபர் 7 முதல் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறைந்தது 1,782 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மட்டும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 41 பாலஸ்தீனியர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...