இஸ்ரேல் நகர் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்: அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலின் ஸ்டெரோட் நகர் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ படைகள் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் இடையே போர் தாக்குதலானது 14வது நாளாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் இதுவரை 2278 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 9,700 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனம் முற்றிலும் சீர்குலைந்து இருந்தாலும், ஹமாஸ் படையினர் தொடர்ந்து தங்களது தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இஸ்ரேலின் ஸ்டெரோட் நகர் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்களின் குழு புகைப்படத்தில் உள்ள நான்கு தலைவர்களை சுட்டிக் காட்டி, அவர்கள் கொல்லப்பட்ட தினத்தை இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.