tamilni Recovered 5 scaled
உலகம்செய்திகள்

காசா மீது எறியப்படும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்: அலறும் பாலஸ்தீனியர்கள்

Share

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலின் போது இஸ்ரேல் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது அத்துமீறி திடீர் தாக்குதலை தொடங்கிய பிறகு, போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் தனது பதிலடி தாக்குதலை தொடங்கியது.

இதையடுத்து காசாவில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.

சமீபத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து இருப்பதுடன், இஸ்லாமிய ஜிஹாத் ஏவிய ராக்கெட் ஒன்று குறி தவறி காஸாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது விழுந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் போர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் அலறுகின்றனர்.

இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டு பாலஸ்தீனியர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் என்பது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழக் கூடியது.

நெருப்புக் கோளமாக வெடித்துச் மனிதர்களை தீவிர தீக்காயங்களுடன் நடைபிணமாக முடக்கக்கூடியவை.

இவற்றை போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் அதை போர்களில் பயன்படுத்துவது போர் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...