உலகம்செய்திகள்

உலகப் போராக உருமாறும் யுத்தம்.! காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 500க்கும் மேற்பட்டோர் பலி

Share
rtjy 217 scaled
Share

உலகப் போராக உருமாறும் யுத்தம்.! காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 500க்கும் மேற்பட்டோர் பலி

பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.

கடந்த 11 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலில், தரை வழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்த தாக்குதலில் இது வரையில் 5000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் பாதுகாப்பிற்காக மக்கள் இடம்பெயர்ந்தும், வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தும் வருகின்றனர்.

காசா பகுதியிலிருந்து மக்கள் வெளியேற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் விமான படை பலஸ்தீன் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஹமாஸ் அமைப்பின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த அதிபயங்கர தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த யுத்தம் உலகப் போராக உருமாறக் கூடிய சர்வதேச சூழ்நிலை அதிகரித்தும் வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கனவே களமிறங்க படைகளை அனுப்பி வருகிறது.

பிரான்ஸும் அமெரிக்காவை பின்பற்றி படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...