6 6 scaled
உலகம்செய்திகள்

தண்ணீரின்றி தவிக்கும் 20 லட்சம் காசா மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்

Share

தண்ணீரின்றி தவிக்கும் 20 லட்சம் காசா மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசிக்கும் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று காசா நகருக்குள் இஸ்ரேலிய ராணுவம் புகுந்து பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் மொத்தம் 2,215 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 8,714 படுகாயமடைந்து இருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெளிநாட்டு குடியுரிமையை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லை கடந்து செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகங்களில் இருந்து மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றனர்.

இந்நிலையில் காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்து விட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் பாலஸ்தீனத்தின் காசா நகரில் மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் கடுமையான அவதி அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...