ஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டவர்களுக்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌனம் காத்தனர்.
பின்னர் பேசிய நாடாளுமன்ற தலைவரான Bärbel Bas, ஹமாஸின் கோழைத்தனமான, அருவருக்கத்தக்க குற்றச்செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான எந்த விடயத்தையும் ஜேர்மனி சகித்துக்கொள்ளாது என்று எச்சரித்தார்.