உலகம்
2 -வது மாத மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 எந்த நாள் வரும் தெரியுமா? முதலமைச்சர் வெளியிட்ட தகவல்
2 -வது மாத மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 எந்த நாள் வரும் தெரியுமா? முதலமைச்சர் வெளியிட்ட தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு எப்போது மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
பின்பு, செப்டம்பர் 15 ஆம் திகதி, மாதம் ரூ.1,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: அடையாளம் காண முடியாமல் குழம்பும் ஆசிரியர்கள்
இதற்கிடையே, குதியுள்ள மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வரும் அக்டோபர் 14 -ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, அக்டோபர் 15 -ம் திகதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஒரு நாள் முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும்.