உலகம்
விஜய் இதைத் தவிர்த்திருக்கலாம், கெட்ட வார்த்தை இப்ப ஒரு ஸ்டைலாக மாறிட்டுது!
விஜய் இதைத் தவிர்த்திருக்கலாம், கெட்ட வார்த்தை இப்ப ஒரு ஸ்டைலாக மாறிட்டுது!
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், பகத் பாசில், சாண்டி, அர்ஜூன் தாஸ்,பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதம் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடைநிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு, விஜய் பேசும் கெட்டவார்த்தை படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. முன்னணி நடிகர் ஒருவர் இப்படி தரக்குறைவாக வார்த்தை பேசலாக என்கிற குற்றச்சாட்டு முன்வந்துள்ளது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ட்ரெய்லர் குறித்த ஒரு சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ட்ரெய்லர் ரசிகர்கள் கொண்டாடும் ட்ரெய்லராக இருக்கிறது இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது. விஜய் என்ன செய்தால், ரசிகர்களுக்கு பிடிக்குமோ அது இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது.ஆனால், ட்ரெய்லரில் வரும் ஆபாச வார்த்தையை தவிர்த்து இருக்கலாம். ஏன் என்றால், விஜய்க்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து இருக்கும் விஜய், தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரத்திலேயே நான்கு மில்லியன் பாலோவர்கள் பார்க்கிறார்களை கடந்துள்ளது. அப்படி இருக்கும் போது இப்படி கெட்டவார்த்தை வருவதை தவிர்த்து இருக்கலாம். விஜய் படங்களில் கெட்டவார்த்தை வராது என்று விஜய் தார்மீகமாக ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டும்.