1 22 scaled
உலகம்செய்திகள்

2024ஆம் ஆண்டில் 700 மில்லியன் டொலர்கள் இழப்பை சந்திக்கவிருக்கும் கனடா

Share

2024ஆம் ஆண்டில் 700 மில்லியன் டொலர்கள் இழப்பை சந்திக்கவிருக்கும் கனடா

இந்தியாவை வம்புக்கிழுத்ததால், கனடா, சுமார் 700 மில்லியன் டொலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பை சந்திக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

2024இல் கனடாவுக்கு மேற்படிப்புக்காகச் செல்ல இருக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் வெறும் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டாலும், கனேடியப் பொருளாதாரம் 700 மில்லியன் டொலர்கள் அளவுக்குப் பாதிக்கப்படும் என்று Imagindia Institute என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கிலான இந்திய மாணவர்கள் கனடாவுக்கு மேற்படிப்புக்காக செல்கிறார்கள். 2022 இல், சுமார் 225,000 இந்திய மாணவர்களுக்கு கனேடிய கல்வி விசா வழங்கப்பட்டது.

இந்திய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, மே மற்றும் செப்டம்பரில் மூன்று பேட்ச்களில் கனடாவுக்குச் செல்கிறார்கள்.

2024 ஜனவரியில், மொத்த மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 66,000 பேர் கனடாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

ஆனால், இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், மாணவர்களுக்கு கவலையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன. ஆகவே, கனடாவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம், அவர்கள் கனடாவுக்கு பதிலாக வேறு நாடுகளுக்கு செல்ல முடிவு செய்யலாம்.

இதனால், அவர்கள் மூலம் கனடாவுக்கு வர இருந்த வருவாய் பாதிக்கப்பட உள்ளது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, கனடாவில் ஒரு இந்திய மாணவர் செய்யும் சராசரி செலவு 16,000 டொலர்கள் ஆகும்.

லேப்டாப் வாங்குதல், வீட்டு செலவுகள், வங்கியில் போடவேண்டிய தொகை மற்றும் விமான டிக்கெட் என, இரண்டு ஆண்டுகள் படிப்பு மற்றும் தங்குவதற்கான மொத்த செலவு, ஒரு மாணவருக்கு, சுமார் 53,000 முதல் 69,000 டொலர்கள் ஆகும்.

இந்நிலையில், ஜனவரி பேட்ச் மாணவர்களில் ஐந்து சதவீத வீழ்ச்சி, அதாவது, 3,300 குறைவான மாணவர்கள் கனடாவுக்குச் செல்லவில்லையென்றால், கனேடிய பொருளாதாரம், குறைந்தபட்சம் 230 மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இதுபோக, மே மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இதே போன்ற வீழ்ச்சி காணப்பட்டால், கனடாவிற்கு ஏற்படும் மொத்த இழப்பு, சுமார் 690 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு, உள்ளூர் வணிகங்களுக்காக வேலை செய்வதன் மூலமும் கனேடிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கனடாவிற்கு வருகை தரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், நாட்டில் சிறிய கனேடிய வணிகங்களுக்கு 34 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும்.

இப்படி அனைத்துக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2024ஆம் ஆண்டில், கனேடியப் பொருளாதாரம், மொத்தமாக 727 மில்லியன் டொலர்கள் இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...