அடுத்த ஆண்டு ரிஷி கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றிவிடுவோம்: எதிர்க்கட்சியினர் உற்சாகம்
ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, எதிர்க்கட்சியினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் Rutherglen and Hamilton West தோகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், லேபர் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. லேபர் கட்சி வேட்பாளரான Michael Shanks 17,845 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இது ஸ்கொட்லாந்தின் பெரிய கட்சியான SNP கட்சியின் வேட்பாளரான Katy Loudonஐ விட 9,446 வாக்குகள் அதிகமாகும்.
இந்த வெற்றி, வரும் பொதுத்தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது என்பதால், இதே நிலை பொதுத்தேர்தலிலும் நீடிக்குமானால், லேபர் கட்சி, பிரதமர் பதவியை பிடிப்பதற்கு அது வழிவகை செய்யக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், லேபர் கட்சியின் தலைவரான Sir Keir Starmer, லேபர் கட்சியால் அடுத்த ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றி, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் கொண்டுவரமுடியும், இன்று அந்த பயணத்தின் ஒரு பகுதியை நாம் காண்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.