உலகம்
இந்தியாவின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாத கனடா! வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாத கனடா! வலுக்கும் எதிர்ப்பு
கனடாவில் இரண்டு காலிஸ்தான் குழுக்களை அரசாங்கம் தடை செய்துள்ளது.
கனடாவில் பாபர் குர்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய இரண்டு காலிஸ்தான் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஐந்து காலிஸ்தான் குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இவற்றில் இரண்டு குழுக்களை மட்டுமே தற்போது கனடா தடை செய்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கனடா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பாவில் சுமார் 11 காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர்.
ஜூன் 18ஆம் திகதி காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பிரச்சினைகளை இரு தரப்பினரும் இணைந்து தீர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று தெரிவித்தார். எனினும், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை மீதான கனேடிய அரசின் அணுகுமுறையே முக்கியப் பிரச்சனை என்று ஜெய்சங்கர் ஊடக சந்திப்பில் விமர்சித்தார்.