1 scaled
உலகம்செய்திகள்

தொடர் கனமழை மற்றும் மின்னல்: 8 பேர் பரிதாபமாக மரணம்

Share

இந்திய மாநிலம் ஜார்கண்டில் பெய்துவரும் கனமழை மற்றும் மின்னல் தாக்குவதாலும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் சிறிய பாலங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் எனவும், மரங்களின் அடியில் நிற்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் விழுந்து பிரசாத் (எ) சோட்டு என்பவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரின் உடலானது இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது.

மேலும், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கடந்த 24 மணிநேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...