tamilni 15 scaled
உலகம்செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்

Share

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்

இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது.

மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது. இந்த மூன்று கப்பல்களும் கடலுக்குள் கிடப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், அப்போது குறைந்த அளவு புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது விரிவான ஆய்வுடன் தெளிவான காணொளி பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியிலிருந்து முறைப்படி குறித்த ஆய்வை மூன்று முழு நாட்கள் குழுவினர் மேற்கொண்டதாக ஓஷன் எக்ஸ்ப்ளரேஷன் ட்ரஸ்ட் முதன்மை விஞ்ஞானி டேனியல் வாக்னர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் கப்பற்படை தாக்கித் தகர்த்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த மிட்வே சண்டை நடைபெற்றது.

அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இணையான தொலைவில் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிட்வே அடால் என்ற குட்டித் தீவுகளில் இருந்த அமெரிக்க ரோந்து விமான தளத்தைத் தாக்கித் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்காவின் பசிபிக் கடற்படைப் பிரிவிலுள்ள கப்பல்களை அழிக்கவும் ஜப்பானிய கடற்படை திட்டமிட்டது.

ஆனால், இதுதொடர்பான தகவல் தொடர்புகளை அமெரிக்கப் படையினர் ஒட்டுக்கேட்டு முன்னதாகவே அறிந்துகொண்டுவிட்டனர். இதைத் தொடர்ந்து, மிட்வே அடாலிலிருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு 5 நாள்கள் இந்தச் சண்டை நடைபெற்றது.

நான்கு விமானந் தாங்கிக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன், 200-க்கும் அதிகமான ஜப்பானிய விமானங்களை அமெரிக்கப் படை சுட்டு வீழ்த்தியது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கத் தரப்பில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். போரில் மிக மோசமாகச் சேதமுற்ற யார்க்டவுன் விமானந்தாங்கிக் கப்பல், சுமார் 150 விமானங்களுடன் பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப்பட்டபோது ஜப்பானிய நீர்மூழ்கியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...