உலகம்

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

Published

on

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

டுபாய் சர்வதேச விமான நிலையமானது ஆசிய – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆசியா – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, டுபாய் விமான நிலையம் பிராந்தியத்தில் உள்ள மற்றைய விமான நிலையங்களை விடவும் சிறந்த சேவையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, டுபாய் விமான நிலையமானது இவ்வாண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட சற்று அதிகமாகும் எனவும், டுபாய் விமான நிலையம் இவ்வாண்டின் முதல் பாதியில் மொத்தம் 201,800 விமானங்களைக் கையாண்டள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 வீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் விமான நிலையமானது 104 நாடுகளில் 255 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் 90 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version