உலகம்

ஈரானுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்! நடைபெறவுள்ள முக்கிய விவாதம்

Published

on

ஈரானுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்! நடைபெறவுள்ள முக்கிய விவாதம்

ராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செர்ஜி ஷோய்கு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது.

ரஷ்யா பயன்படுத்தும் ஈரானிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டது உண்மைதான் என்றும், அவை போர் தொடங்குவதற்கு முன்னதாக வழங்கப்பட்டவை என்று தெஹ்ரான் தெரிவித்தது.

ஆனால் தி வாஷிங்டன் போஸ்ட் ரஷ்யாவில் ட்ரோன்கள் உற்பத்தியை தொடங்க 2022ல் அக்டோபரில் ரஷ்யாவும் ஈரானும் மறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவித்தது.

இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஈரானின் இராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானுக்கு வந்தடைந்துள்ளார்.

ரஷ்ய அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து எத்தகைய தகவலும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் ஈரானின் செய்தி நிறுவனமான தஸ்னிம், இந்த சந்திப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version