உலகம்
அமெரிக்காவில் திடீரென காணாமல்போயுள்ள எப்.35 போர் விமானம்!
அமெரிக்காவில் திடீரென காணாமல்போயுள்ள எப்.35 போர் விமானம்!
அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானப்படையான அமெரிக்காவின் 80 மில்லியன் டொலர் மதிப்புடைய விமானமே இவ்வாறு திடீரென காணாமல்போயுள்ளது.
இந்த விமானத்தின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியாமல் இராணுவத்தினர் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் கரோலினா கடலோரம் இந்த விமானம் சென்ற போது தொடர்பு அறுந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, விமானம் ஆட்டோ மோடில் இருந்ததாகவும் விமானி பாராசூட் மூலம் குதித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
QABAflexlrowha-chevron-left leflexlstoryd>