உலகம்

முதன்முறையாக தனியாக வெளிநாடு செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்

Published

on

முதன்முறையாக தனியாக வெளிநாடு செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்

முதன்முறையாக தன் கணவரான இளவரசர் வில்லியமை தனியாக வெளிநாடொன்றிற்கு அனுப்பிவைத்துள்ளார் அவரது மனைவியான இளவரசி கேட்.

முதன்முறையாக மனைவி கேட் இல்லாமல் தனியாக வெளிநாடு செல்கிறார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.

Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதொன்றை உருவாக்கியவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.

தற்போது, அமெரிக்காவில் சுற்றுச்சூழல் தொடர்பிலான Earthshot Prize Innovation Summit என்னும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதற்காகத்தான் இளவரசர் வில்லியம் அமெரிக்கா சென்றுள்ளார்.

சாதாரண மனிதர்கள் இளவரசர்களை அன்னாந்து பார்த்து, நமக்கும் அவர்களைப்போல வாழ்வு கிடைக்காதா என ஏங்கும் நிலையில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, இளவரசர் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் சாதாரண மனிதர்களைப்போல சாதாரணமாக வாழவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆகவேதான் வில்லியம் அல்லது கேட், பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விடுகிறார்கள். இரவு உணவின்போது, நிச்சயம் தந்தை அல்லது தாய் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிடுவதை உறுதிசெய்கிறார்கள்.

ஆக, தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காகத்தான், கேட் தன் கணவர் வில்லியமுடன் அமெரிக்கா செல்லவில்லையாம்.

அத்துடன், நேற்று இளவரசி கேட் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவும் வேண்டியிருந்தது. சமீபத்தில் மன்னர் சார்லஸ் Commodore-in-Chief of the Fleet Air Arm என்னும் முக்கிய பொறுப்பை இளவரசி கேட்டுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version