உலகம்

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

Published

on

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவரின் செல்போனை குரங்கு பள்ளத்தாக்கில் வீசியதால் தேடுதல் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

கேரளா மாநிலத்தில் பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியதுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவர் உள்ளூர் மக்களிடம் உதவியைக் கேட்டுள்ளார். அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.

ஆகவே தீயணைப்பு துறையினரிடம் உதவியைக்கேட்டுள்ளனர். ஆனால் மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.

பின் செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், செல்போனை மீட்டு தருமாறுக் கேட்டுள்ளார். எனவே தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக தேடுதல் பணியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version