உலகம்
8 வருடங்களுக்கு பிறகு போய்கோ கோபுரங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்ட உக்ரைன்
8 வருடங்களுக்கு பிறகு போய்கோ கோபுரங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்ட உக்ரைன்
கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை உக்ரைன் தற்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
கிட்டத்தட்ட 19 மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப கட்டங்களில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்துடன் உக்ரைன் தென்கிழக்கு பகுதியின் 4 முக்கிய பிராந்தியங்களை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாகவும் ரஷ்யா அறிவித்தது.
இருப்பினும் ரஷ்ய படை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பல பகுதிகளை உக்ரைனிய படைகள் தற்போது எதிர் தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை(Boiko towers) தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் கொண்டுவந்துள்ளது.
இந்த போய்கோ கோபுரங்கள் கடந்த 2015ம் ஆண்டு ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அத்துடன் இதனை ரஷ்யா அவர்களது ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்தனர்.