உலகம்
உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்:
உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்:
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் ஒருவர், நீர் நிலை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள Burnley என்னுமிடத்தைச் சேர்ந்த ஜோர்டன் (Jordan Chadwick, 31) 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்காக உக்ரைன் சென்றுள்ளார்.
அவர் 2011 முதல் 2015 வரை பிரித்தானிய ராணுவத்தில் சேவை புரிந்தவர் ஆவார். சிறு வயதிலிருந்தே ராணுவ வீரராக வேண்டும், சுதந்திரத்துக்காக பாடுபடவேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட ஜோர்டன், அக்டோபர் 2022இல் உக்ரைனுக்குச் சென்றதாக அவரது தாயாகிய பிரெண்டா (Brenda Chadwick) கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜூன் மாதம், 26ஆம் திகதி நீர் நிலை ஒன்றில், கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஜோர்டன்.
அவரது மரணம் தொடர்பான விசாரணை ஒன்று, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட உள்ளது.
தன் மகனுடைய தைரியம் மற்றும் மனம் தளராமை ஆகிய குணங்களால் தாங்கள் பெருமிதம் அடைந்தாலும், அவரது மரணம் தங்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜோர்டனின் தாயாகிய பிரெண்டா.