2 17 scaled
உலகம்செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவுக்கு க்ரீன் சிக்னல்!

Share

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவுக்கு க்ரீன் சிக்னல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிஅனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கதுறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்பிறகு, இவரது வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோர முடியாது என்றும், ஜாமின் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிப்பதா இல்லை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிப்பதா என்று சட்ட சிக்கல் ஏற்பட்டது.

பின்னர், செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஜாமின் மனு மட்டுமல்ல, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இன்று காலை செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ய முறையிடப்பட்டது. இதனை நீதிபதி அல்லி ஏற்றுக் கொண்டு, மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...