உலகம்செய்திகள்

இளம் வீடியோ கேம் டெவலப்பர்; ஆறு வயது கனேடிய சிறுமி கின்னஸ் சாதனை

Share
6 22 scaled
Share

இளம் வீடியோ கேம் டெவலப்பர்; ஆறு வயது கனேடிய சிறுமி கின்னஸ் சாதனை

ஆறு வயதான சிமர் குரானா, உலகின் மிக இளைய வீடியோ கேம் டெவலப்பர் என்ற கின்னஸ் உலக சாதனையில் நுழைந்துள்ளார்.

சிமர் தனது முதல் வீடியோ கேமை உருவாக்கியபோது அவருக்கு 6 வயது 335 நாட்கள்.

கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் சிமர், வாரத்திற்கு மூன்று வகுப்புகள் எடுத்து Coding-ஐ முறையைக் கற்கத் தொடங்கினார். சிமர் மிகவும் இளம் வயதிலேயே computer programming உலகில் நுழைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, பல coders சிமாரை சாத்தியமற்றது என்று நிராகரித்தனர்.

ஆனால் அவரது தந்தை பராஸ் குரானா, அவளுக்கு ஒரு ஆசிரியரைக் கண்டுபிடித்து கோடிங்கை தொடங்க உதவினார்.

ஜிம்மர் உருவாக்கிய முதல் கேம் ‘Healthy Food Challenge’. ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்துமாறு மருத்துவர் கூறியதை அடுத்து அவளுக்கு இந்த யோசனை வந்தது.

“மருத்துவர் என்னிடம் ஆரோக்கியமாக சாப்பிடச் சொன்னார், அதனால் ஆரோக்கியமான உணவு மற்றும் ஜங்க் ஃபுட் பற்றி ஒரு விளையாட்டை உருவாக்க முடிவு செய்தேன்,” என்று அவர் கின்னஸ் உலக சாதனை கூறினார்.

“ஜிமர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து தானே கணிதத்தைக் கற்றுக் கொண்டார். மழலையர் பள்ளியில் படிக்கும் போதே அவரால் grade 3 கணிதத்தைக் கற்றுக் கொள்ள முடிந்தது. கையில் உள்ளதைப் பயன்படுத்தி கைவினைப்பொருட்கள் மற்றும் கேம்களை செய்கிறார். அத்தகைய திறன்களைக் கொண்ட கோடிங் துறையில் அவர் இயல்பாகவே சிறந்து விளங்குவார் என்று நான் உணர்ந்தேன். அதனால், நான் ஒரு டெமோ கோடிங் வகுப்பை முயற்சிக்கும்படி அவளை ஓக்கப்படுத்தினேன், அது அவளுக்குப் பிடித்திருந்தது” என்று தந்தை பராஸ் குரானா கூறினார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...