4 22 scaled
உலகம்செய்திகள்

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

Share

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உதயகுமார் (64) மற்றும் ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28) எம்.இ படித்து முடித்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர், இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கல்விக்கடனாக 2.5 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்த கடனை கட்டி முடிக்காததால் இலவச சட்ட மையத்தில் இருந்து கணேஷ் ராஜா இன்று (செப்.08) ஆஜராகுமாறு அழைப்பாணை வந்துள்ளது.

இதன் பிறகு, இந்த தகவலை கணேஷ் ராஜாவின் தாயார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது தனது தாயிடம், நான் உயிருடன் இருக்க மாட்டேன் எனக் கூறி கணேஷ் ராஜா கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ராஜா சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கல்விக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்தேன் என விரக்தியில் பெற்றோரிடம் மன வேதனையுடன் கூறியுள்ளார்.

அப்போது, அவர்கள் கடனை கட்டி விடலாம் என்றும், இலவச சட்ட மையத்திற்கு ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர்.

பின்னர், மாடி அறைக்கு சென்ற கணேஷ் ராஜா கதவை பூட்டியுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது தூக்கிட்டு மயங்கிய நிலையில் கணேஷ் ராஜா கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கணேஷ் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...