உலகம்
ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்
தென் மேற்கு ரஷ்ய நகரமான பிஸ்கோவ்வில் உள்ள விமான நிலையம் மீது புதிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமான நிலையம் மீது புதிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இந்த நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 600 கி மீ தொலைவில் எஸ்டோனியா நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ள தகவலில், ட்ரோன் தாக்குதலை ரஷ்ய ராணுவம் முறியடித்தது என்று தெரிவித்தார், மேலும் மிகப்பெரிய வெடிப்பு சத்தத்துடன் கூடிய தீயை காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
ரஷ்ய உள்நகரங்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பிஸ்கோவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்கள் பங்கு இருப்பதாக இதுவரை உக்ரைன் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
பிஸ்கோவ் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு போக்குவரத்து விமானம் சேதமடைந்து இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் Ilyushin 76 போக்குவரத்து விமானத்தில் தீ பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் நிலை தகவல்படி, பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என இதில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.