பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

rtjy 234

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் நாட்டை விட்டு வெளியேறிய சந்தேகநபரான சிறுமியின் தந்தையை நெருங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் முன்னர் தந்தை உட்பட உறவினர்கள் மூவர் மற்றும் 5 சிறார்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ராவல்பிண்டி பிராந்திய பொலிஸ் தலைவர் குர்ரம் அலி தெரிவிக்கையில்,

தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், உர்ஃபான் ஷெரீப் தலைமறைவாக இருக்கும் பகுதியை நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறுமி கொலை வழக்கில் அந்த மூவரையும் விசாரணை நிமித்தம் பிரித்தானியாவுக்கு அழைத்துவருவது சிக்கலான விடயம் என்றும் கூறப்படுகின்றது.

சிறுமி சாரா இரண்டு வாரங்களுக்கு முன்னர் சர்ரே, ஹார்செல்லில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version