உலகம்

ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு மொத்தமாக தடை விதித்த நாடு

Published

on

ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு மொத்தமாக தடை விதித்த நாடு

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் விடுவிக்க இருப்பதை அடுத்து சினா முக்கிய முடிவெடுத்துள்ளது.

ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வியாழக்கிழமை ஜப்பான் விடுவிக்க இருக்கிறது. விவாதத்துக்குரிய இந்த செயலை அடுத்து ஜப்பானில் இருந்து கடல் உணவுகளை தடை செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.

அத்துடன் ஜப்பானின் இந்த முடிவு சுற்றுவட்டார மீனவ சமூகங்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. வியாழக்கிழமை மிக குறைவான அளவு சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இந்த நடவடிக்கைக்கு பின்னர் கடல் நீதின் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் கதிரியக்க நீரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவின் சுங்கத்துறை தெரிவிக்கையில், ஜப்பானில் இருந்து அனைத்து வகையான கடல் உனவு இறக்குமதியும் உடனடியாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. கதிரியக்க நீரை வெளியேற்றும் ஜப்பானின் இந்த முடிவு சுயநலம் மிக்கது மட்டுமின்றி பொறுப்பற்ற செயல் எனவும் சீனா கடுமையாக விமர்சித்திருந்தது.

மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் முழு உலகிற்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாம் நிலை பேரழிவு இது என்றும் சீனா எச்சரித்துள்ளது.

இதனிடையே, சியோலில் உள்ள ஜப்பானிய தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கதிரியக்க நீரை வெளியேற்றுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் நுழைந்த குறைந்தது 14 பேரை தென்கொரிய பொலிசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 24ம் திகதி தொடங்கி 17 நாட்களாக மொத்தம் 7,800 கன மீற்றர் கதிரியக்க நீரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ஒரு நாளுக்கு 500,000 லிற்றர் மட்டுமே வெளியேற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

2011ல் அடுத்தடுத்து நடந்த மூன்று பேரழிவுகளுக்குப் பிறகு, ஐந்து ஜப்பானிய மாகாணங்களிலிருந்து கடல் உணவு மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்தது.

அதன் பின்னர் ஜப்பானின் 47 மாகாணங்களில் 10 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அதன் தடையை விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version