6 12 scaled
உலகம்செய்திகள்

மொட்டை அடித்துக் கொண்ட காயத்ரி ரகுராம்!

Share

பிரபல நடிகையும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்துக் கொண்டு தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக புகழ்பெற்றவர் காயத்ரி ரகுராம், சில திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட காயத்ரி ரகுராம், எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்களை குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வது வழக்கம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பாஜக-விலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய மாணவரின் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கிடையே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற காயத்ரி ரகுராம், மொட்டையடித்துக் கொண்டுள்ளார்.

மேலும் தன்னுடைய 10 ஆண்டு கால வேண்டுதலை, அர்ப்பணிப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் அவர் வெளியிட, ஆன்மீகவாதியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...