உலகம்
ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி
ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி
ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உயிரற்ற உடல், நீர் நிலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
பெர்லினில் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டு இளம்பெண்ணான மரியா (Maria Fernanda Sanchez, 24), கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி மாயமானார்.
ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்துள்ள துயர செய்தி | Mysterious Foreign Teenager In Germany
அவர் தங்கியிருந்த குடியிருப்பில் அவர் தனது மொபைலை விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது. அவர் எங்கு போனார் என்பது அந்தக் குடியிருப்பில் இருந்த யாருக்குமே தெரியவில்லை.
மெக்சிகோ நாட்டு ஜனாதிபதியான Andres Manuel Lopez Obrador, மரியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்துமாறு ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeierஐ கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை, பெர்லினிலுள்ள Adlerhof என்னுமிடத்தில், வாய்க்கால் ஒன்றில் மரியாவின் உயிரற்ற உடல் கிடப்பதை அவ்வழியாக நடந்து சென்ற ஒருவர் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
மரியாவின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மாயமான மரியா உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login