உலகம்
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்!
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்!
துனிசிய கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 51 பேர் காணாமல் போயுள்ளனர்.
துனிசியாவின் கெர்கென்னாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 4 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 51 பேரைக் காணவில்லை என தகவலால் தெரிவிக்கின்றன.
கப்பலில் இருந்த அனைத்து குடியேற்றவாசிகளும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கினறன்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை, துனிசிய கடலோர காவல்படை நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தோரின் 901 உடல்களை மீட்டதாக ஜூலை மாதம் நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார்.
துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலிய கடற்கரைக்கு செல்லும் புலம்பெயர்ந்த படகுகள் அடிக்கடி மூழ்கும்.
ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கைக்கான நம்பிக்கையில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் வறுமை மற்றும் சண்டையிலிருந்த வெளியேறும் மக்கள் இடம்பெயர்வதற்கான முக்கிய மையமாக துனிசியா மாறியுள்ளது.
You must be logged in to post a comment Login