உலகம்
வினோத நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்! மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி
வினோத நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்! மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி
கொலம்பியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்களில் ரத்தம் வடியும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு போராடி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஜாரிக் ராமிரெஸ். இவருக்கு 2020ஆம் ஆண்டில் அரிய நோய் ஏற்பட்டுள்ளது.
அதாவது இவருக்கு கண்களில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. கண்கள் மட்டுமின்றி மூக்கில் இருந்தும் ரத்தம் கசிய தொடங்கியுள்ளது.
பின்னர் வாயில் இருந்தும் ரத்தம் வெளியேறியதால் ஜாரிக் பயத்தால் மிரண்டு போனார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளார்.
ஆனால் எந்த சிகிச்சைக்கும் பலனில்லை என்று கூறப்படுகிறது. நோய் சிகிச்சை நிபுணர் லூயிஸ் எஸ்காஃப், ‘விகாரியஸ் மென்சுரேஷன்’ என்ற நோயால் ஜாரிக் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நோய் குறித்து அவர் விவரிக்கும்போது, பெண்களின் மாதவிலக்கு தொடர்புடைய எண்டோமெட்ரியல் திசுவானது, எண்டோமெட்ரியம் பகுதியை தாண்டி உடலின் வேறு பகுதியிலும் வளர்ந்திருக்கும் பட்சத்தில் இதுபோன்ற கசிவு ஏற்படும்.
மாதவிலக்கு சுழற்சியின்போது கர்ப்பப்பை பகுதியில் இருந்து உதிரப்போக்கு ஏற்படுவதைப் போலவே, எண்டோமெட்ரியம் திசுக்கள் பரவியிருக்கின்ற உடலின் மற்ற பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படுகிறது என்றார்.
இதேபோல் மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘இதுபோன்ற பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் பெண்ணுறுப்பு பகுதி மட்டுமல்லாமல் மூக்கு, காது, மார்பு, வயிறு, கால்கள் மற்றும் மூளையில் இருந்தும் கூட இரத்தக் கசிவு ஏற்படும்’ என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஜாரிக் ரமிரெஸ், எந்தவொரு மருத்துவரால் தனது பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என்றும், உறவினர்கள் மற்றும் தோழிகள் என யாரும் மனரீதியாக ஆதரவு அளிப்பது இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login