அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்!
அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ பகுதியில் உள்ள இலங்கை குடும்பம் வாழும் வீட்டின் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதன்போது தாக்குதல்தாரிகள் கருப்பு உடை அணிந்து, கூர்மையான ஆயுதங்களுடன் வந்து அச்சுறுத்திய நிலையில் தாக்குதலை எதிர்கொண்ட இலங்கையர் உடனடியாக அவர்களுக்கு பதிலளித்துள்ளமையும் பதிவாகியுள்ளது.
மேலும், தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களின் முக்கிய நோக்கம் காரை கடத்தி செல்வதாக இருக்கலாம் என சம்பவத்தை எதிர்கொண்ட இலங்கையர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார.
தற்போது, சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய குழுவைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment