அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான்
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான்

Share

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான்

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் தனி நாடாக பிரிந்த தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வரும் நிலையில், சீனாவி்ன் கோபம் அமெரிக்கா மீது பாய்ந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை தைவானுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது.

இதன்மூலம் தைவானை தனது வெடிமருந்து கிடங்காக அமெரிக்கா மாற்றி விட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் இந்த இராணுவ உதவிகள் தைவானை ஒன்றிணைக்கும் தனது விருப்பத்தை எந்தவிதத்திலும் தடுக்காது என சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...