கல்லூரி மாணவி கொலை
உலகம்செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த  கல்லூரி மாணவி கொலை!!

Share

திருமணம் செய்ய மறுத்த  கல்லூரி மாணவி கொலை!!

டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ், 26 வயதான இர்பான் என்பவரை விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்திற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பின்பு, நர்கீஸ் இர்பானுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனையடுத்து, நர்கீஸ் தன்னுடன் பேசுவதை நிறுத்திய பிறகு இர்பான் வருத்தமடைந்துள்ளார். இந்த ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த நர்கீஸ் மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று தெற்கு டெல்லி மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே உள்ள பூங்காவிற்கு நர்கீஸ் தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அவர், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொல்லப்பட்டார்.

பின்பு, தகவல் அறிந்ததும் தெற்கு பொலிஸ் துணை கமிஷனர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பலியான பெண்ணின் உடல் அருகே ஒரு கம்பி மற்றும் அவரது தலையில் காயங்கள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக அவரது 28 வயது நண்பரான இர்பானை கைது செய்துள்ளனர். இதுகுறித்து, முதற்கட்ட விசாரணையில் “சிறுமியை தடியால் தாக்கியதில் அவரது தலையில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டது” என்று பொலிசார் தெரிவித்தனர் . மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறினர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், அவரை கொலை செய்ய தூண்டியதாக இர்பான் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்,”மாளவியா நகர் போன்ற ஆடம்பரமான பகுதியில், ஒரு பெண் கம்பியால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். டெல்லி மிகவும் பாதுகாப்பற்றது. குற்றங்கள் நிற்கவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...