உலகம்

நைஜர் நாட்டில் ஆட்சியை வீழ்த்தியது ராணுவம் – அதிபர் சிறைபிடிப்பு

Published

on

நைஜர் நாட்டில் ஆட்சியை வீழ்த்தியது ராணுவம் – அதிபர் சிறைபிடிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர்.

நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் புதன்கிழமை பிற்பகுதியில் தோன்றிய வீரர்கள் குழு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என ராணுவ வீரர்கள் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.

அதிபருக்கு ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது.

ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

1 Comment

  1. Pingback: அடித்துக் கூறுகின்றார் ரணில் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version