பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படை கொடூர செயல்
உலகம்செய்திகள்

பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படை கொடூர செயல்

Share

பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படை கொடூர செயல்

வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் தற்போது சடலங்கள் மீட்கபட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் வாக்னர் கூலிப்படை தளபதி ஒருவர் ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வாக்னர் தளபதி Shekhovtsov உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஜூன் 24ம் திகதி வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காதவர்கள் இவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்தை ஆதரிக்கும் வாக்னர் கூலிப்படையின் தளபதி ஒருவர் தொடர்புடைய படுகொலையை முன்னெடுத்துள்ள நிலையில் வாக்னர் கூலிப்படையில் சட்ட ஒழுங்கு இல்லை என்பது அம்பலமாகியுள்ளதாக கூறுகின்றனர்.

இதேவேளை வாக்னர் கூலிப்படையினர் உக்ரைனுக்கு ஆதரவான ரஷ்யர்களை முன்னர் சம்மட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

ஆனால் தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுத கிளர்ச்சியில் ஆதரவளிக்காத வீரர்களை படுகொலை செய்யும் நிலைக்கு எட்டியுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...