ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் - ஜெலென்ஸ்கி
உலகம்செய்திகள்

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

Share

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

அங்கு, ‘உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம். அது இருக்கும்’ என ஜெலென்ஸ்கி கூறிய அறிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதேபோல் வியாழன் அன்று வெளியிட்ட கருத்துக்களில், நேட்டோ உச்சிமாநாடு உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு அடித்தளத்தை அளித்து, கூட்டணியில் அங்கத்துவம் பெறுவதற்கான பாதையில் வைத்தது என்றார் ஜெலென்ஸ்கி.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் இராணுவ வீரர்கள், ஏவுகணைகள் ஏவுதல் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜெலென்ஸ்கி,

‘உக்ரைனின் சுதந்திரத்திற்காக, கண்ணியத்திற்காக, மக்கள் அனைவரது வாழ்வதற்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் வீரர்களுக்கு, எங்கள் ஹீரோக்களுக்கு, போராடும் அனைவருக்காகவும் உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஜெலென்ஸ்கி தனது வீடியோவில், சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக உக்ரைன் நேட்டோவுக்கான பாதையில் பாதுகாப்புக்கான அடித்தளத்தை நாங்கள் நிறுவியுள்ளோம் என கூறியிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...