உலகம்
மூளையை உண்ணும் அமீபா! கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு
மூளையை உண்ணும் அமீபா! கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் 15 வயது சிறுவன் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய பாக்டீரியா தொற்றால் உயிரிழந்துள்ளான்.
மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும், மத்திய நரம்பு மண்டலத்தின் அபாயகரமான தொற்று Naegleria fowleriயால் ஏற்படுகிறது.
கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 15 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவர் சில தினங்களுக்கு முன்பு நீரோடைக்கு குளிக்க சென்றுள்ளார். பின்பு, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஆலப்புழா மாவட்ட மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, சில நாள்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் ஏற்பட்ட அரியவகை நோயால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள் தரப்பில், மூளையை உண்ணும் அமீபா ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட தேங்கி நிற்கும் நீரோடைகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாணவர் ஓடையில் குளிக்கும் போது அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது.ஓடையில் உள்ள Naegleria fowleri என்னும் அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து மூளையை சென்றடைகிறது எனக் கூறினர்.
அங்கு, மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது. இந்த அரியவகை நோயால் தான் மாணவர் உயிரிழந்துள்ளார்.
இது முதன் முதலில் 2017 ஆன் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. பின்பு, இரண்டாவது முறையாக இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுகிறது. அமீபா தாக்கி முதல் அல்லது இரண்டு வாரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.
பின்பு, தலைவலி அதிகமாதல், வாசனையில் மாற்றம் போன்றவை ஏற்படும். நீரின் மூலம் இந்த தொற்று ஏற்படுவதால் அசுத்தமான நீரில் குளிப்பது மற்றும் முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கை பெண்ணுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்திய குடியுரிமை - tamilnaadi.com