அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!
அரசியல்உலகம்செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!

Share

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கு வெள்ளை பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோபை டன் வெள்ளை மாளிகையில் இல்லை. வெள்ளை மாளிகைக்கு உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது. பின்னர் மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதில் அது கோகைன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...