இலங்கை
டைட்டன் கப்பலில் உயிரிழந்த கோடீஸ்வரின் இலங்கை விஜயத்தின் போது நடந்தது
டைட்டன் கப்பலில் பயணித்து உயிரிழந்த மிகப்பெரிய பிரித்தானிய கோடீஸ்வரரான Hamish Harding கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் மகனுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த போது குருநாகல் பகுதியில் வைத்து அவரது தனது பணப்பையை தொலைத்துள்ளார்.
நாடு திரும்பும் போதே அவர் தனது பையை தொலைத்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த பையை இலங்கையை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.
அது தொடர்பில் அந்த இளைஞன் அவரது பெரியப்பாவிடம் விடயத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக பையில் இருந்த இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு பை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.
அப்போது வரையில் விமானத்தில் ஏறியிருந்த Hamish Harding டிக்கட்டை இரத்து செய்துவிட்டு விமானத்தில் இருந்து இறங்கியுள்ளார். அந்த பைக்கும் அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் பாரிய அளவில் காணப்பட்டுள்ளது. அதன் அப்போதைய பெறுமதி இலங்கை ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாயாகும்.
இந்த பை கிடைக்காதெனவும் அது தொடர்பான எதிர்பார்ப்பை கைவிட்ட நிலையிலேயே Hamish Harding பிரித்தானியா பயணிக்க திட்டமிட்டிருந்தார்.
அந்த பையை கண்டெடுத்தவர் வீட்டிற்கு சென்ற Hamish Harding அந்த பையை சோதனையிட்ட போது ஆச்சரியமடைந்துள்ளார். அதில் எவ்வித குறைவும் காணப்படாமையினால் அவர் அந்த பணத்தை இலங்கையருக்கு வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார்.
You must be logged in to post a comment Login