rtjy 10 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் கப்பல்கள், போர் விமானங்கள் அழித்து ஒழிக்கப்படும்: தைவான்

Share

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருப்பக்கம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், மற்றொரு பக்கம் தைவான் மற்றும் சீனா இடையிலான பதற்றம் என உலக அமைதியில் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வருகிறது.

தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தங்களை சுதந்திர நாடாக அறிவித்து வருகிறது.

ஆனால் தைவானின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தைவான் கடல் ஜலசந்தியில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.

இதனால் இந்த இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தீவு நாடான தைவானுக்கு அருகில் உள்ள 12-மைல் மண்டலம் என அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை தைவான் ஆயுதப்படை அழித்து ஒழிக்கும் என தைவான் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் லின் வென்ஹுவாங் எச்சரித்துள்ளார்.

இந்த 12-மைல் மண்டலம் என்பது தைவானுக்கு சொந்தமான நீர் மற்றும் வான்பரப்பை உள்ளடக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...