உலகம்
உகாண்டாவில் பிரதி அமைச்சர் சுட்டுக்கொலை!
உகண்டாவின் பிரதியமைச்சர் ஒருவர், தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரினால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாலின மற்றும் தொழிலாளர்கள் துறை பிரதியமைச்சர் சார்ள்ஸ் ஒகேலோ என்கோலாஇ அவரின் வீட்டில் வைத்து இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவராவார். பாதுகாப்பு பிரதியமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
பரதியமைச்சர் என்கோலாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தஇ உகண்டா தேசிய இராணுவத்தின் சிப்பாய் ஒருவரே அவரை சுட்டுக்கொன்றுள்ளார்.
இச்சிப்பாய்க்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் ஏதேனும் வாக்குவாதம் இடம்பெற்றதா என்பது இன்னும் தெரியவில்லை.
இச்சம்பவத்தின் பின்னர் மேற்படி சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
You must be logged in to post a comment Login