உலகம்
தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!
ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் மீண்டும் ஒரு கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் வீதிக்க ஓடி வந்துள்ளார்.
அதாவது 53 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
பின் குறித்த பெண் கத்தி குத்து காயத்துடன் இரத்தம் வெளியேறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள நிலையில் வீதியில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் 29 வயதுடைய மகனை பொலிஸார் தேடி வருவதாக தெரிய வந்திருக்கின்றது.
இவர் ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.
மேலும் இந்த கொலை இடம் பெற்ற தினம் அவர் மனநல வைத்தியசாலையில் நியமனம் ஒன்றை பெற்றிருந்துள்ளார்.
ஆனால் அன்றைய தினம் அந்த வைத்திய சாலைக்கு செல்லவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.
இதன் காரணத்தினால் தற்பொழுது பொலிஸார் 29 வயதுடைய மகனை தேடி வருவதாக தெரியவந்திருக்கின்றது.
You must be logged in to post a comment Login