உலகம்
மரதன் ஓடியவர் உயிாிழப்பு!
மரதன் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் இடை நடுவே உயிரிழந்த சம்பவம் ஓட்டப் பந்தய வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான லண்டன் மரதன் ஓட்டப் பந்தயம் அண்மையில் இடம்பெறுள்ளது.
அதில் 45 வயதுடைய பிரித்தானியரான ஸ்டீவும் கலந்து கொண்டு வெறும் இரண்டு மணி 53 நிமிடங்களில், 26.2 மைல் தூரத்தை ஓடிக்கடந்துள்ளார்.
இவர் லண்டன் மரதனில் பங்குபற்றிய பின்னர் வீடு திருப்பிய வேளை வழியிலேயே திடீரென மரணம் அடைந்துள்ளர்.
நாட்டிங்காமிலுள்ள பிங்காமில் வாழும் 45 வயதான ஸ்டீவ், அனுபவம் வாய்ந்த ஒரு ஓட்டப்பந்தய வீரர் ஆவார். இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டீவ் மரணமடைந்தமைக்குரிய காரணம் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவருமென ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login