இத்தாலிக்கு துனிசியா வழியாக செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து 93 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக துனிசியா கடல் வழியாக இத்தாலி செல்ல முயன்ற 3 படகுகளை அந்த நாட்டின் கடலோரா காவல்படை தடுத்து நிறுத்தி படகுகளில் இருந்த 93 அகதிகளை மீட்டனர்.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை இரவு இதுபோன்ற 3 முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று துனிசிய தேசிய காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ஹூஸ்மெடின் ஜபாப்லி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#world
Leave a comment