Buckingham Palace
உலகம்செய்திகள்

ஹரி – மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம்

Share

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகள் இருவரும் அரச குடும்பத்தின் அரச பட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இனி அவர்கள் முறையாக இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என அழைக்கப்படுவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இதுபற்றி பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

“இங்கிலாந்து அரச பட்டங்களுக்கான விதிகளின்படி, ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிறக்கும்போதே தானாக இளவரசர் மற்றும் இளவரசி ஆக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அப்போது ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆவர். தற்போது அவர்களின் தாத்தா 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியவுடன் அவர்கள் இருவரும் அரச பட்டங்களுக்கு உரிமையை பெற்றனர்” என கூறினார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...