இந்தியா

ஜி 20 மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்

Published

on

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு ‘பசுமை காலநிலை நிறுவனத்தை’ உருவாக்கி உள்ளோம். உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்.

இந்தியா ஜி 20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும். அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம் உள்ளிட்டவைகளை உலக அளவில் கொண்டு செல்ல இந்த வாய்ப்பினை பிரதமர் பயன்படுத்தி கொள்வார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version