கடந்த மாதம் 21ம் திகதி இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஜாவா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஜாவா மற்றும் மத்திய ஜாவா மாகாணங்களுக்கு இடையே உள்ள பஞ்சார் நகருக்கு தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
#World
Leave a comment