இலங்கை

மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாமில்!

Published

on

இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்த அகதிகள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இன்று (08) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் இருந்த 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 சிறுவர்கள் உட்பட 303 இலங்கையர்களும் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் வியட்நாமின் ஹீலியோஸ் லீடருக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அதற்கமைய படகிலிருந்தவர்களை மீட்டு வியட்நாம் நோக்கி கொண்டு செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர் என்று கடற்படை தெரிவித்தது.

படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வியட்நாமை இன்று (08) சென்றடைந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள், கனடா நோக்கி பயணமான இலங்கைத் தமிழர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version