1787858 charles
உலகம்செய்திகள்

அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா – மே 8 பொது விடுமுறை

Share

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் மாதம் 8-ம் திகதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.

சார்லஸ் மன்னர் செப்டம்பரில் அரியணை ஏறினார். இதற்கிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, மே 6-ம் திகதி முடிசூட்டு விழாவை தொடர்ந்து, மே 8ஆம் திகதி வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...